தேர்தல் நடைமுறைகளை கண்காணிப்பது தொடர்பான செயலமர்வு திருகோணமலையில் இன்று நடைபெற்றது.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தினால் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
வாக்குரிமை, தேர்தல் வன்முறை, வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கட்சி பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com