மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தேவேந்திரமுனை பகுதியை சேர்ந்த 28,29 வயதான இரண்டு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பயணித்த வேன், துப்பாக்கி ஆகியன கந்தர- வெள்ளமடம பகுதியில் கைவிடப்பட்டு செல்லப்பட்டுள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை
கந்தர பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com