பாடசாலை மாணவர்களில் 28 வீதத்திற்கும் அதிகமானோர் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் தொடர்பாடல், சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்ட இணையதள பாவனைக்காக ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பாடசாலை மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் சுகாதார ஆய்வறிக்கை ஊடாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
31.3 வீதமான மாணவர்களும் 25.5 வீத மாணவிகளும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16-17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களே அதிகளவில் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதுடன் , மொத்த மாணவர்களில் இது 40.6 வீதத்தை சுட்டிநிற்கிறது.
கடந்த 12 மாதங்களில் பாடசாலை மாணவர்களில் 5.4 வீதமானோர் சைபர் குற்றங்களுக்குள் அகப்பட்டுள்ளனர்.
இதேவேளை 13-15 வயதிற்கு இடைப்பட்ட 5.6 வீதமானவர்கள் சைபர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் கல்விகற்கும் 13-17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com