புலம்பெயர்ந்தோரின் தற்காலிக குடியுரிமை அந்தஸ்தை இரத்து செய்ய அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கியூபா, ஹைட்டி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவிலிருந்து சென்றுள்ள 530,000 க்கும் அதிகமான குடியேறிகளின் தற்காலிக சட்டப்பூர்வ அந்தஸ்தை இரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை இவர்களுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறாதவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என அமெரிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக புலம்பெயர்ந்துள்ளோர் நாட்டிலிருந்து செல்வதற்கு தேவையான வழிமுறைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே சட்டரீதியான அந்தஸ்தை பெற்றவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
Link : https://namathulk.com