யாழ்ப்பாணத்தில் மூன்று மாதங்களில் 37 சிறுவர்கள் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் மூன்று சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்ற மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன
கடந்த 2024.12 .11 தொடக்கம் 2025.03.21 வரையான மூன்று மாத கால இடைவெளிக்குள் 12 பிரதேச செயலகங்களில் 37 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சிறுவர்களுக்கு எதிராக குறித்த பகுதிகளில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகம், பிறழ்வு நடவடிக்கை, உடல்ரீதியான துன்புறுத்தல், இளவயது திருமணம் , இளவயது கர்ப்பம், உடல் தண்டனை, தற்கொலை முயற்சி , மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களாக பதிவாகியுள்ளன.
Link : https://namathulk.com