முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவும், யோசித்தவின் மனைவி மற்றும் மேலும் எட்டு நண்பர்களுடன் கொழும்பு -02 பகுதியிலுள்ள களியாட்ட விடுதிக்கு நேற்றிரவு சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவரிடம் களியாட்ட விடுதிக்குள் செல்வதற்கான அனுமதி சீட்டு இல்லாமை தொடர்பில், பாதுகாப்பு பிரிவினர் விசாரணை செய்துள்ளனர்.
இதன்போது வாய்த்தர்க்கம் வலுப்பெற்றுள்ளது .
இந்நிலையில், யோசித்தவுடன் சென்ற அவருடைய எட்டு நண்பர்களும் பாதுகாப்பு பிரிவினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இச்சந்தர்பத்தில் யோசித்த ராஜபக்சவும், அவரின் மனைவியும் அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் களியாட்ட விடுதியின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com