வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வாக்களித்தார்.
மக்களின் அபிலாஷைகளின் அடிப்படையில் தான் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகக் காதர் மஸ்தான் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதால் அதற்கு தாம் ஆதரவளித்ததாகவும் கூறியுள்ளார்.
மாற்றத்தை நோக்கி மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ததாகவும், மக்களுடன் ஒன்றித்து பயணிக்க தாம் இணங்குவதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
Link : https://namathulk.com