அம்பாறை காரைதீவு, மாவடிப்பள்ளி பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
காரைதீவு, மாவடிப்பள்ளி வயல் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்களது விவசாய நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் அச்சத்துடனே வாழ்வதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வேளாண்மை அறுவடை நிறைவடைந்துள்ளதையடுத்து சுமார் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வயல்களில் நிலை கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
Link : https://namathulk.com