இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான 06வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனை கூட்டம் நாளை மறுதினம் (25) நடைபெறவுள்ளது.
பேங்கொக்கில் உள்ள தாய்லாந்து வெளியுறவு அமைச்சில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளியுறவுத்துறை நிரந்தர செயலாளர் எக்சிரி பின்தருச்சி ஆகியோர் இணைந்து இந்த ஆலோசனைகளுக்கு தலைமை தாங்கவுள்ளனர்.
இலங்கை மற்றும் தாய்லாந்தின் இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் இந்த வருடம் கொண்டாடும் வேளையில், அரசியல் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம் மற்றும் விவசாயத் துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com