உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான 03 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
கண்டி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலே முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரவித்தனர்.
கண்டி தலாத்துஓயா பகுதியில் ஒரு வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாத்தறை கபுகம வடக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் கூறினர்.
அத்துடன் களுத்துறை பேருவளை – ஹெட்டிமுல்ல பகுதியிலும் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com