காசா தாக்குதல்களில் 50,000 பாலஸ்தீனியர்கள் பலி

Aarani Editor
1 Min Read
காசா

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் நிலைமை மேலும் தீவிரமடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என எவ்வித பாகுபாடும் இன்றி தாக்குதல்கள் நடாத்தப்படுகிறது .

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சும் , ஐக்கிய நாடுகள் சபையும் கூறுகின்றன.

பல ஆயிரம் பேர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

காசாவில் இரண்டு மாத போர்நிறுத்தத்தை முடித்துக் கொண்டு, இந்த வாரம் ஹமாஸுடனான தனது போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியதால், பலி எண்ணிக்கை அதிகரித்தது.

Link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *