நாட்டின் பொருளாதாரத்தில் தீர்மானமிக்க திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டை வெற்றியடையச் செய்யும் பயணத்தை கண்டு பொறாமைப்பட்டவர்களாக வரலாற்றில் இடம் பிடிக்காமல், அதற்கு பங்களிப்பு செய்தவர்களாக மாறுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் மீதான இறுதி வாக்களிப்பு தினத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை கூறியுள்ளார்.
நாட்டை சுபமான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்ற சமிக்ஞையை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த 4 மாத காலப்பகுதியில் நாடு நல்லதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மையை நாட்டுக்குள் உருவாக்கியுள்ளதென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்படி பல பொருளாதார வெற்றிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் வெளிநாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கான சமிக்ஞையை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முன்னோக்கி நகர்த்தும் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைத்து எவரேனும் அரசியல் செய்ய நினைத்தால் அவர்கள் அரசியலில் இருந்து செல்லாதவர்களாகி விடுவார்கள் என தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பின்பற்றி ஆசிர்வதிப்பதே இன்றைய நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உள்ள ஒரே வழியாகும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், ஊடகங்கள் ஊடாக அரசியல் செய்யும் யுகம் முடிந்துவிட்டதாகவும், அந்த யுகம் நடைமுறையில் இருந்தால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருக்காது எனவும் ஜனாதிதிபதி கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எப்போதும் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடும் ஒரு அரசியல் இயக்கம் என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Link: https://namathulk.com