யாழ்ப்பாணம் வலி வடக்கு தையிட்டி பகுதியிலுள்ள திஸ்ஸ விகாரைக்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
விகாரை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் ஒன்று இன்று திறக்கப்பட்டது.
இதன்போது குறித்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த, தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் புதிய கட்டடம் நிர்மாணிக்க தொடர்ச்சியாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
திஸ்ஸ விகாரைப் பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சினை நிவர்த்தி செய்யப்படும் என்று புத்தசாசன அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் இந்த புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு குறித்த பகுதியை பூர்வீகமாக கொண்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
Link: https://namathulk.com