சோமாலியாவின் லோயர் ஜூபா பகுதியில் உள்ள தோப்லி நகரில் இருந்து ஆப்பிரிக்க யூனியன் படைகளுக்கு பொருட்களை விநியோகிக்கக் சென்ற சரக்கு விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொகடிஷுவில் இருந்து சுமார் 24 கிமீ தென்மேற்கில் விமானம் விபத்துக்குள்ளானது என சோமாலிய சிவில் விமான சேவை அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்
அவர்களில் 4 பேர் கென்யா பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com