இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “திறந்த வெளி நிகழ்ச்சியை” ஏற்பாடு செய்திருந்தது .
நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் பொது மக்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் நடமாடும் நுவரெலியா கிரகறி வாவிக்கரையோரத்தில் அமைந்துள்ள வாகனம் நிறுத்தும் திடலில் இந்த நிகழ்வு நடைபெற்றது .
டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்துவதையும், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி டிஜிட்டல் பணம் செலுத்துவது குறித்த தெளிவுப்படுத்தப்பட்டது.
தொழில் புரிவோர், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு நன்மை பயக்கும் விடயங்களை பெற்றுக்கொண்டனர்.
Link: https://namathulk.com