போத்தலில் இருந்த டீசலை சோடா என அருந்திய பச்சிளங்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் , ஊர்காவல்துறையை, நாராந்தனை தெற்கு பகுதியை
சேர்ந்த சதீஷ் சஞ்சித் என்ற ஒரு வயதும் ஒன்பது மாதன்க்களுமான ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி உழவியந்திரத்தில் இருந்து டீசலை , போத்தல ஒன்றில் எடுத்த குழந்தையின் தந்தை, அதனை வெளியில் வைத்துவிட்டு கை கழுவச் சென்றுள்ளார்.
இதன்போது போத்தலில் இருந்த டீசலை சோடா என குழந்தை பருகியுள்ளது.
மயக்கமடைந்த நிலையில் உடனடியாக ஊர்காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் நேற்று குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.
சாட்சிகளை ஊர்காவற்றுறைப் பொலிசார் நெறிப்படுத்தினர்.
Link: https://namathulk.com