சிறப்பு படகுகள் படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த கடற்படை வீரர்களுக்கு பதக்கங்கள் அணிவிப்பு
இலங்கை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் 32வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இரண்டு அதிகாரிகள் (02) மற்றும் முப்பத்தி நான்கு (34) மாலுமிகளுக்கு பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் திருகோணமலை, கடற்படைத் தளத்தில் உள்ள சிறப்புக் படகுகள் படைத் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த கடினமான பயிற்சியின் போது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை வீரர்களுக்கு கடற்படை தளபதி வெற்றிக்கிண்ணங்களை வழங்கினார்.
கடற்படையினர் தமது கடமையை முறையாக நிறைவேற்றி, தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அதிகபட்ச ஆற்றலுடன் நிறைவேற்ற வேண்டுமென இதன்போது கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

Link: https://namathulk.com