காசாவில் நடாத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல்
கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அரசியல் தலைவரின் மனைவியும் இதன்போது கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிட்ட இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காசா மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
ஹமாஸை அழிப்பதை நோக்காக கொண்டு இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் காசாவில் அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
Link: https://namathulk.com