நாட்டின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
Link: https://namathulk.com