கம்பஹா சீதுவ பகுதியில் நடாத்தப்பட்ட பேஸ்புக் களியாட்ட விருந்தில் கலந்துக்கொண்ட 15 யுவதிகள் உள்ளிட்ட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைபொருள் பயன்படுத்தப்பட்டு களியாட்டம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிசார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குறித்த களியாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த இளைஞர்களும் , யுவதிகளும் ஐஸ் , கஞ்சா பயன்படுத்தியிருந்ததாக பொலிசார் கூறினர்.
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து கஞ்சா , வெளிநாட்டு சிகரெட்டுக்கள் உள்ளிட்ட போதைபொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன .
Link: https://namathulk.com