மாத்தறை தேவேந்திரமுனை இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளது.
மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தேவேந்திரமுனை பகுதியை சேர்ந்த 28,29 வயதான இரண்டு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பயணித்த வேன், துப்பாக்கி ஆகியன கந்தர- வெள்ளமடம பகுதியில் கைவிடப்பட்டு செல்லப்பட்டுள்ளது.
கந்தர பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com