வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கிப்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையில் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில் பதிவான முக்கிய சம்பவங்களின் கனேமுல்ல சஞ்சீவ கொலை, கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை, கம்பஹா பகுதிகளில் நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் பாரிய பேசுபொருளாக மாறின.
அத்துடன் மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகமும் முக்கிய சம்பவமாக பதிவாகியுள்ளது.
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளாகவே இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com