விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பனி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், வீட்டில் சமைத்த உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலனை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வமாக அனுமதி கோரியுள்ளதாகவும், அதனை நியாயப்படுத்த சரியான காரணங்களை வழங்குமாறு தென்னகொனிடம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிகம ஹோட்டலுக்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த தென்னகோன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20 நாட்களுக்குப் பின்னர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
அதனை தொடர்ந்து நீதவானின் உத்தரவிற்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com