ஹட்டன் நோர்வூட் பகுதியில் நேற்று மாலை மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது .
இதன்போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளன மரமொன்று முறிந்து வீட்டின் மேல் வீழ்ந்துள்ளது.
இதனால் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது.
முறிந்து வீழ்ந்துள்ள மரக்கிளையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வீட்டு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே நோர்வூட் வெஞ்சர் தோட்டத்திலும் பலத்த காற்றால் சேதங்கள் பதிவாகியுள்ளன.
Link: https://namathulk.com