இலங்கை விமானப்படையினர் வசமுள்ள K-8 ரக விமானங்களின் தரம் தொடர்பில் ஆராய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
குருநாகல் வாரியபொல பகுதியில் K-8 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்து தொடர்பில் ஆராய ஐவரடங்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே சீனாவால் தயாரிக்கப்பட்ட K-8 ரக விமானங்களின் தரம் தொடர்பில் ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இந்த நடவடிக்கைகளுக்கு தேவை ஏற்படும் பட்சத்தில் வெளிநாட்டிலிருந்து விசேட நிபுணர் குழுவை வரவழைக்கவும் தயாராக உள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
Link: https://namathulk.com