இந்த போட்டி இன்று இரவு 7.30 அளவில் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் இம்முறை புதிய தலைவர்களுடன் களமிறங்கவுள்ளது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு அக்ஷர் படேலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ரிஷப் பந்த்தும் தலைவராக செயற்படவுள்ளனர்.
இதேவேளை நேற்று நடைபெற்ற 3ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடிப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது
இந்தநிலையில் 156 எனும் வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்திருந்தது.
Link : https://namathulk.com