பல ஆண்டுகளின் பின்னர் நாட்டில் மீண்டும் சிக்குன்குனியா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் கோட்டே இந்த நோய்நிலமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அகற்றுவதே சிக்குன்குனியா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே சிறந்த வழிமுறை என வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாடசாலை விடுமுறை என்பதால் சிறார்கள் அதிகளவில் வெளியிடங்களுக்கு செல்லக்கூடும்.
ஆகவே நுளம்பு தொல்லை குறித்து அவதானமாக செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சிக்குன்குனியாவின் பொதுவான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
– திடீர் காய்ச்சல்
– மூட்டு வலி, பெரும்பாலும் கடுமையானது மற்றும் பொதுவாக கைகள் மற்றும் கால்களை பாதிக்கிறது
– தசை வலி
– தலைவலி
– குமட்டல்
– சோர்வு
– சொறி
நுளம்பு கடித்த நான்கு முதல் எட்டு நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தென்படும்.
அது இரண்டு முதல் 12 நாட்கள் வரையும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நோயாளிகள் முழுமையாக குணமடைகின்ற போதிலும், சில சந்தர்ப்பங்களில் மூட்டு வலி வாரங்கள் அல்லது மாதங்கள் வரை நீடிக்கும்.
Link : https://namathulk.com