இலங்கைக்கும் அவுஸ்திரெலியாவிற்கும் இடையிலான 5வது சுற்று மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை மற்றும் 3வது மூலோபாய கடல்சார் உரையாடல் இந்த வாரம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு 2025 மார்ச் 25 முதல் 26 வரை கான்பெராவில் உள்ள அவுஸ்திரெலியாவின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தகத் துறையில் நடைபெறும் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.
இரண்டு கூட்டங்களுக்கும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கூடுதல் செயலாளர், யசோஜா குணசேகர மற்றும் அவுஸ்திரெலியாவின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தகத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் முதல் உதவிச் செயலாளர் சாரா ஸ்டோரி ஆகியோர் இணைந்து தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசியல் ஈடுபாடு, பொருளாதார கூட்டாண்மை, கடல்சார் ஒத்துழைப்பு, மேம்பாட்டு கூட்டாண்மை, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான ஈடுபாடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பலதரப்பு உறவுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com