தென் கொரிய அரசமைப்பு நீதிமன்றம் பிரதமர் ஹன் டக் சூவை (Han Duck-soo) பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளது.
இராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயன்ற தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை அடுத்து ஹன் டக் சூ தென் கொரியாவின் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
எனினும் இரண்டு வாரங்களுக்குள் ஹன் டக் சூவும் அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் மீண்டும் பதில் ஜனாதிபதியாக ஹன் டக் சூ தென் கொரிய அரசமைப்பு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link : https://namathulk.com