நிரந்தர நியமனம் கோரி இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

Rajan
By
1 Min Read
வனவிலங்கு மின்சார வேலி

வனஜீவராசிகள் திணைக்களத்தின் இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினரின் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெற்றது.

சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் இர்பான் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டமானது மட்டக்களப்பு பஸ்நிலையத்திலிருந்து பேரணியாக கச்சேரி வரை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளுக்கமைவாக, அவை இரத்துச் செய்யப்பட்டு காந்திப்பூங்காவில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் நிலவும் யானைப் பிரச்சனைகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளைப் பராமரிப்பதற்கென நாடு முழுவதும் 4,731 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டு தற்போது வரை 3,530 உத்தியோகத்தர்கள் மாத்திரமே கடமைபுரிகின்றனர்.

அவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு சுமார் 5 வருடங்கள் ஆகியும், அடிப்படை வசதியின்றி நிரந்தரம் நியமனம் இன்றி இரவு பகலாக இற்றைவரை 22,500 ரூபா பயிற்சி கொடுப்பனவை மாத்திரம் பெற்று கொண்டு சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *