பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை விமானம் சமீபத்தில் விபத்துக்குள்ளானது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
குறித்த விபத்தை விசாரிக்க, சிறப்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் விசாரணை அறிக்கையின் நகலைக் கேட்டுப் பெற்றதாகக் கூறினார்.
மேற்படி அறிக்கையின்படி, விமானம் மற்றும் இயந்திரங்கள் பராமறிக்கப்பட்டவை என்பதனையும், அவை பழுதானவை அல்ல என்பதனையும் அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
மார்ச் 21 வெள்ளிக்கிழமை வாரியபொலவில் இலங்கை விமானப்படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.
இரண்டு விமானிகளுடன் சென்ற மு-8 பயிற்சி ஜெட் விமானம் திடீரென ரேடார் தொடர்பை இழந்து வாரியபோலாவில் உள்ள மினுவாங்கொடையில் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com