போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் Govpay மூலம் போக்குவரத்து அபராதங்களை மிக விரைவில் செலுத்த முடியும் எனவும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவன உறுப்பினர் ஹர்ஷா புரசிங்க கூறினார்.
இது தொடர்பான அடிப்படை பணிகள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தால் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் இத தொடர்பிலான ஒப்பந்தமொன்று கையெழுத்திடவுள்ளதாகவும் நிறுவன உறுப்பினர் தெரிவித்தார்.
Govpay என்பது வரிகள், அபராதங்கள், பில்கள் மற்றும் கல்வி கட்டணங்கள் போன்ற அரசு தொடர்பான சேவைகளுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஒன்லைன் கட்டண தளமாகும்.
Link : https://namathulk.com