மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயன்முறை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி, 2025 மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதற்கிடையில், வேட்பாளர்களின் வைப்புத்தொகை 2025 மார்ச் 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முடிவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்ததது.
அத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவின் காரணமாக மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததது.
Link : https://namathulk.com