யாழ் மாவட்டத்தில் சேவை வழங்கும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான மின்கலங்களை திருடியவர்கள் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குத்த நிறுவனங்களின் சேவை வழங்கும் கிளைகளில் தொடர்ச்சியாக மின்கலங்கள் திருட்டுபோகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வந்துள்ளது.
இந்நிலையில் கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மின்கலங்களை மறைத்து வைக்கப்பட்ட இடம் முற்றுகையிட்டு ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com