சுமார் 16 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள புதிதாக அமைக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபை கட்டிடத்தின் வேலைகளை துரிதப்படுத்துவதற்காக இவ் வரும் 400 மில்லியன் ரூபா அமைச்சுக்கு விடுவிக்கப்பட்ட நிலையில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுமார் 2,142 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாநகர சபை கட்டிடமானது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக விரைவாக முடிவடையாமல் காணப்பட்டது.
கடந்த வருடம் 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் 560 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்ட நிலையில் 82 விதமான வேலைகள் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை 1,992 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் கீழ்ப்பகுதி வேலைகளை பூரணப்படுத்தி யாழ் மாநகர சபையிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சரவை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், முழுமையான வேலைகளை பூர்த்தி செய்வதற்கு சுமார் 1,800 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டமையை தொடர்ந்து, இந்த வருடத்துக்கான வேலைத்திட்டங்களுக்காக சுமார் 400 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு வேலைகள் இடம் பெற்று வருகிறது.
Link : https://namathulk.com