பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகினர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ஜி.வி பிரகாஷ்குமார் உள்ளார்.
தற்போது படங்களிலும் அவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இவர் தனது பாடசாலை தோழியும் பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆன்வி என்ற பெண் பிள்ளை இருக்கும் நிலையில் இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
அத்துடன் தங்களுக்கு விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகி பரஸ்பரம் பிரிவதாக தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
இதையடுத்து ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link : https://namathulk.com