கம்பஹா வத்தளை – உஸ்யட்டகெய்யாவ பகுதியில் நடாத்தப்பட்ட Instagram இரவுநேர களியாட்ட நிகழ்வில் கலந்துக்கொண்ட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்தி களியாட்ட நிகழ்வு நடாத்தப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய நேற்றிரவு சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கஞ்சா வைத்திருந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களியாட்டத்தின் போது போதைபொருள் பயன்படுத்தியிருந்த 07 யுவதிகளும், 34 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் களியாட்ட விடுதியின் உரிமையாளர் 03 கிராம், 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பை சேர்ந்த 18-35 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் .
சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com