2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர விஞ்ஞான பரிட்சை வினாத்தாள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி அறிவிப்பு குறித்து கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தி அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விஞ்ஞான பரீட்சைக்கான வினாத்தாள் ஏற்கனவே கசிந்துள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை கருத்திற்கொண்டு 08 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படுவதுடன், வெட்டுப்புள்ளியும் 10 புள்ளிகளால் குறைக்கப்படும் என குறித்த போலி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலி அறிவிப்பை கல்வி அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது.
இவ்வாறான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ தீர்மானங்கள் அனைத்தும், கடித தலைப்புகளுடன், அமைச்சின் ஊடகப் பிரிவினூடாக மாத்திரமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com