இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆஸ்கர் விருது வென்ற இயக்குனரை இஸ்ரேல் இராணுவம் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆஸ்கார் விருது பெற்ற பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹம்தான் பல்லால் என்பவரே இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிலைமையை மையப்படுத்தி ‘நோ அதர் லேண்ட்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ஹம்தான் பல்லால்.
இவர் காசாவின் மேற்கு கரையில் வசித்து வந்த நிலையில் அப்பகுதிக்குள் உள்நுழைந்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இஸ்ரேலிய இராணுவம் அவரை சிறைபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறைபிடிக்கப்பட்ட ஹம்தான் பல்லால் தற்போது காசாவின் மேற்குக் கரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
link: https://namathulk.com