உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை பகுதிகளில் இருந்து தேர்தல் தொடர்பான இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளையில், தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடும்அ பதிவாகவில்லை என பொலிசார் கூறினார்.
பொலன்னறுவையில் உள்ள சிறிபுர பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பேஸ்புக்கில் ஒரு வீடியோ பரப்பப்பட்டுள்ளதாகக் கூறி முறைப்பாடு அளித்துள்ளார்.
அத்துடன், மாத்தளையில் உள்ள மஹாவெல பகுதியில் வேட்பாளர் ஒருவரின் ஏராளமான கட்அவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது;.
Link : https://namathulk.com