கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதுடன், சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த வீரர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
18 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான ரொனால்டோ, 2025-இல் தனது 40 வயதிலும் அதே உத்வேகத்தில் விளையாடி வருகின்றார்.
அத்துடன் நடப்பு UEFA நேஷன்ஸ் லீக் தொடரில் தனது தேசிய அணிக்கு இரண்டாவது கிண்ணத்தை வென்று கொடுக்கும் முனைப்பில் ரொனால்டோ தீவிரமாக விளையாடி வருகிறார்.
UEFA நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றில் டென்மார்க் அணியை ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் ரொனால்டோ இந்த வெற்றியின் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 132ஆவது வெற்றியைப் பதிவுசெய்து, உலக அளவில் அதிக சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
link: https://namathulk.com/