தென் கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீயினால் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காட்டுத்தீயினால் குறித்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இதனிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர்.
காட்டுத்தீயால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com