விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை ஒன்றில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
அதன்படி, அவரை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் குறித்த பிரேரணை இன்று பிற்பகல் 12.15 மணியளவில் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் 115 பாராளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட இந்த பிரேரணையின் மூலம் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Link : https://namathulk.com