இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின், மாகாண அபிவிருத்தி நிதியின் கீழ் 10 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
இதற்கு முன்னதாக பயன்படுத்திய நுவரெலியா பிராந்திய சுகாதார காரியாலய பிரிவுக்குட்பட்ட லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தின் பின்புறத்தில் காணப்படும் பாரிய மண்மேட்டிலிருந்து மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்பட்டது.
இதனால், அவ்விடத்தில் இருந்து வெளியேறி நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசேல பெரேராவை லிந்துல சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் து. ரெஷ்னி உட்பட சுகாதார அதிகாரிகள் சந்தித்து இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைவாக, இந்த புதிய கட்டிடத்தை அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com