ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்துடன் இணைந்ததாக, கொழும்பு விசாகா கல்லூரியின் விசேட பாராளுமன்ற அமர்வு இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற பீடத்தில் நடைபெற்றது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமர்விற்கு தலைமை தாங்கினார்
கொழும்பு விசாகா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “Clean Sri Lanka” திட்ட எண்ணக்கருவின் மதிப்பு மற்றும் அதன் நடைமுறை முக்கியத்துவம் குறித்த தெளிவு பெறவும் வாய்ப்பு இதன்போது கிட்டியது.
மாணவர் பாராளுமன்றம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட “விஷன்” சஞ்சிகையின் பிரதியை, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் நிறைவேற்றுப் பொறுப்பு தொடர்பான உதவிப் பணிப்பாளர் நதீக தங்கொல்ல பிரதமரிடம் வழங்கினார்.
பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தலைமுறையொன்றை உருவாக்க புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது தெரிவித்தார்.
உலகில் அறிவைப் பெறுவதற்கு மாணவர்களை தயார்படுத்துவது மற்றும் தன்னம்பிக்கை கொண்ட மாணவர் தலைமுறையை உருவாக்குவது என்பன அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் கூறினார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வேலைவாய்ப்புச் சந்தைக்கு மட்டுமல்லாமல், சமூகத்தை வழிநடத்தக் கூடிய பொருளாதாரத்திற்கும் பங்களிக்க முடியுமான திறமையான இளைஞர்களை உருவாக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கிடையே வளங்களைப் பகிர்ந்து செல்வதில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்பதோடு இதற்கு பிரஜைகளின் பொறுப்பின் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.Link: https://namathulk.com