இயக்குநர் பாரதி ராஜாவின் மகனும், நடிகர் மற்றும் இயக்குநரான மனோஜ் பாரதிராஜா காலமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாரதி ராஜா.
இவரது இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு தாஜ்மஹால் என்ற திரைப்படம் வெளியானது.
இந்த படத்தின் மூலம் தனது மகன், மனோஜ் பாரதிராஜாவை திரைத்துறைக்கு பாரதி ராஜா அறிமுகப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து மனோஜ் பாரதிராஜா “சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2023ஆம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கியிருந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோஜ் பாரதிராஜா (48), மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com/