இலங்கையின் இராணுவ வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடைகளை விதித்திருப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது x தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவாறு கூறியுள்ளார்.
பிரித்தானியாவால் விதிக்கப்பட்ட தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல. மாறாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாகும் உன பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
இது நீதியான செயற்பாடு அல்ல என்றும், சில மேற்கத்திய அரசியல்வாதிகள் செல்வாக்கினால், தேசத்தின் நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுவதாகவும் பாராளுமனற் உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
இன்று அனுபவிக்கும் சுதந்திரம் கடுமையான முடிவுகளின் மூலம் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தத் தடைகளுக்குப் பின்னால் உள்ளவர்கள் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
சில சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்க சலுகைகளை நாடும் சில தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் சமூகம் இரையாக வேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறதா அல்லது வெளிநாட்டு சக்திகள் தாக்கும்போது அமைதியாக இருக்கிறதா என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
Link : https://namathulk.com