யாழ்ப்பாணம், பொற்பதி பகுதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில், 14 வயது சிறுமி, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றதாகவும், அங்கு இனிப்பு வகையை கையாடியதாக கூறி கடையின் உரிமையாளரான பெண் மேற்படி சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதன் காரணமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிசாருக்கு கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com