பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசனின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஷகிப் அல் ஹசன், கடந்த ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களின் போது, கனடாவில் தஞ்சம் அடைந்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி ஐ.ஐ.எப்.சி, வங்கியின் சார்பாக ஷகிப் அல் ஹசன் உட்பட நால்வர் மீது 3 கோடி ரூபா மோசடி வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இவ் வழக்கில் ஆஜராகாததினால் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தற்போது அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகள், 247 ஒருநாள் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் விளையாடி மொத்தம் 712 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com