தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் 69ஆவது திரைப்படத்தைப் பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்.
இந்த திரைப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் திகதி
வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை 2026ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆகிய இருவரின் திரைப்படங்களும் ஓரே நாளில் வெளியாக உள்ளதால் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
link: https://namathulk.com